இளைய நிலா
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம் ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
Monday, March 21, 2011
தென்றல் விடு தூது
தேசம் கடந்து சென்று அவன்
கேசம் கலைத்துவரும் தென்றலே
என் பாசம் வெறும் வேஷம் இல்லையென்று
அவனிடம் நேசத்துடன் சொல்லிவிடு
...நீ அவனை தழுவிவருவதால் தான்
நான் உன்னை சுவாசிக்க மட்டுமல்ல
யாசிக்கவும் செய்கிறேன்......
நீ என்னைத் தீண்டும் போதெல்லாம்
என்னுள் நீள்கிறது அவன் நினைவு
ஏன் இந்த வன்மம் உனக்கு
என் அன்பு போல் ஒருதலை பட்சமாக.....(தனா)
Wednesday, December 15, 2010
News
அமெரிககா காட்டுக்குள் வினோத உருவம்! (படங்கள் இணைப்பு)
அமெரிககாவில் மான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்ற ஒருவர் தான் அடர்ந்த காட்டுக்குள் இந்த உருவத்தைக் கண்டு படம் பிடித்ததாகக் கூறி வேட்டை நிகழ்வுகள் சம்பந்தமான ஒரு இணையத்தளத்துக்கு இந்தப் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.


இந்த நபர் தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை. இந்தப் படத்தை எடுத்தபோது தான் பெரும் அச்சமடைந்ததாகவும், தடுமாற்றத்தில் தனது கமரா கூட உடைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.கமரா உடைந்தபோதும் அதிலிருந்த மெமரி கார்ட்டுக்கு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுப்பர்மேன் போல் காட்சியளித்த இந்த உருவம் காட்டுக்குள் மறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்இந்தக் காட்சியை இந்த இணையத்தளத்தில் பார்த்த பலரும் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஒரு இணையத்தள விளையாட்டில் இந்த உருவம் காணப்படுவதாக ஒருவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
News
வார்டு அறையில் சுற்றுகிறது வேலூர் ஆஸ்பத்திரியில் நுழையும் மர்ம உருவம்; செல்போன் படத்தால் பேய் பீதி ( வீடியோ இணைப்பு) |
வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார். |
15 Dec 2010 |
காதல்
மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா............
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா............
Subscribe to:
Posts (Atom)